வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான எனக்கு பிடித்த செய்திகளை இங்கு பகிர்கிறேன். சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம் அ ருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம்; பாலதேவராய ஸ்வாமிகள் அருளிய கந்தசஷ்டிக் கவசம் போன்று முருகப்பெருமானைப் போற்றும் துதிப்பாடல்களில் ஸ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவமும் ஒன்று. பாம்பன் சுவாமிகள் அருளிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஆறு மண்டலங்களாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள் சான்றோர்கள். அவற்றில் ஆறாவது மண்டலத்தில் அமைந்திருக்கிறது ‘குமாரஸ்தவம்’ எனும் மிக அற்புதமான இந்தத் துதிப்பாடல். முருக வழிபாட்டில், முதலில் இந்தப் பதிகத்தைப் பாடிவிட்டு பின்னர் ஆராதனையைத் தொடங்குவது வெகுவிசேஷம். இந்தத் துதிப்பாடல் இருக்கும் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் தானே வந்து சேரும். வறுமையும் பிணிகளும் நீங்கும். மேலும், பில்லி சூன்யம் முதலான தீவினைகளும் தீய சக்திகளும் அந்த இல்லத்தை நெருங்கவே முடியாமல் விலகி ஓடும் என்பது அனுபவத்தில் கண்டுணர்ந்த பெரியோர்களது அறிவுறுத்தல். எப்படிப் பாடுவது,...
Thanks for writing this blog, You may also like the Murugan vel
ReplyDelete